தேர்வுகள்:
- 6 முதல் 8 வரை Unit Test – Syllabus படி நட்த்தப்படும் (or) மாதம் ஒரு Unit என்ற வகையில் நட்த்தப்படும்.
- 10ம் வகுப்பிற்கு மாத த்தேர்வு.
- 12ஆம் வகுப்பிற்கு நடைபெறும் வாரத்தேர்வுகள் முறைப்படுத்தப்பட்டு வினாக்கள் Unit Wise Portion தெளிவாக்கப்பட்டு மாணவர்களுக்கு தேர்வு வைத்தல் அவசியம்.
- NMSE and NTSE:
Mr.P.இருதயராஜ், ஆசிரியர் (Sec.Grade) Mr.A.லியோ சில்வஸ்டர், ஆசிரியர் (or) Mr.ARA., Tr., Mr.S.பாஸ்கர், ஆசிரியர் (Sec.Grade) Mr.MVA, Tr.
Notes of Lesson:
Notes of Lesson தெளிவாக எழுதுகிற ஆசிரியர் தெளிவாகப் பாடம் நட்த்துவார். 8 வரிகளில் Notes of Lesson எழுதக்கூடாது. அறிவியல், கணித ஆசிரியர்களில் தேவையான இடங்களில் படங்கள் இருத்தல் இன்றியமையாத்து. ஒருசில Notes of Lesson மிகச் சிறப்பாக உள்ளது.
- முதல் பக்கம் நிறைவு செய்யுங்கள்
- இறுதிப் பக்கத்தில் தேதி-ஆசிரியர் ஒப்பம் தவறாது இடுங்கள் ஒரு வாரம் விடமல் தொடர்ச்சியாக எழுதுவதைப் பார்த்து மகிழ்வதற்கு உதவியாக இருக்கும்.
- Month wise Syllabus-எழுதப்படல் அவசியம் ஒட்டுதல் தவிர்த்தல் வேண்டும்.
சிறப்பு வகுப்புகள்:
10,12, வகுப்புகளில் 100 சதவீத தேர்ச்சியை இலக்காக வைத்து அரசுப் பள்ளிகளும், அருகிலுள்ள பள்ளிகளும் விடாது முயல்கிறதைப் பார்க்கும் நமக்கும், நமது பள்ளியும் 100 விழுக்காட்டை பார்க்கும் நமக்கும், நமது பள்ளியும் 100 பெற கடினமாக உழைப்போம் என்ற சபத த்துடன் உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து 10,12 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.
மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது-நாமாகப் பணியைச் செய்தால்-நலம், மகிழ்ச்சி பெருகும்-செய்யச்சொன்னால்-வருத்தம் , எரிச்சல், சினம்-மிகும்.
எனவே தினமும் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை 4.40 முதல் 5.30 வரையிலும், சனிக்கிழமைகளில் 9.30 முதல் 12.30 வரையும் சரியாக நட்த்திடவும், அதற்கு மேல் தாமாகவே முன்வந்து மாணவரின் நலன் கருதி சிற்ப்பு வகுப்புகள் எடுக்கும் எந்த ஆசிரியர்க்கும் தடையில்லை. வரவேற்கத்தகுந்த ஒன்று.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல் என்ன செய்யலாம் என பிறகு முடிவு எடுக்கப்படும். 1st Mid-Term முடிந்த்தும் மிகவும் பிந்தங்கியவர்களுக்கு முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர் முன்வருதல் அவசியம்.
திங்கட்கிழமை -கூட்டுவழிபாடு
வாரம் ஒரு வகுப்பால் நட்த்தப்பெறும் கூட்டு வழிப்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களை நன்முறையில் தயாரித்து வழங்க வேண்டும்.
கூட்டு வழிபாட்டிற்கு 9.10க்கு மணி அடித்தவுடன் அந்த அந்த பகுதியிலிருந்து வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்து வந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா! தங்கள் மாணவரை வரிசைப்படுத்தி அமைப்படுத்தி-வகுப்பிற்கு நற்பெயர் ஈட்டச்செய்வதும் நமது கடமை கூட்டு வழிபாட்டை புறக்கணிக்கும் ஒரு சில ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை. அலுவலகத்தில் அமர்ந்து கொள்ளுதல், அல்லது Toilet பக்கம் நின்று கொள்ளுதல்-நின்று பேசிக்கொண்டிருத்தல் தவிர்க்கப்பட வேண்டியவை. வழிபாட்டுக்கூட்ட்த்தின் பொழுது ஆசிரியர்கள் தங்கள் வகுப்புடன் இருப்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Assembly நேரத்தில் ஆசிரியர்கள் கூட்டமாக நின்று உரையாடிக்க்கொண்டிருப்பதும், தலைமையாசிரியரின் கருத்துக்களுக்கு மாணவர் முன்னிலையிலேயே மாற்றுக்கருத்தை உரக்கப் பேசுவதும், தங்களுக்கு தெரியாத்து அல்ல. இது நன்மாதியான முன்மாதிரிகை அன்று.
ஒவ்வோர் ஆசிரியரும் பள்ளி தொடங்க 15 நிமிடத்திற்கு முன்னமே பள்ளியில் இருக்க வேண்டும் 9.00 மணிக்கு வந்து விட்டால் Master Sign செய்த உடன் தங்கள் பிரிவேளைக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டால் மீண்டும் Staff-room செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. (இரண்டு பிரிவேளைக்கு இடையில்) ஒரு சில ஆசிரியர்கள் Staff room நாடி ஓடி வருதல் தவிர்க்கப்படுதல் வேண்டும். தேவையான தண்ணீர் பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பிரிவேளைக்கும் மற்றொரு பிரிவேளைக்கும் இடையில் ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் நேரமும், அந்நேரத்தில் மாணவரின் கட்டுப்பாடில்லா சப்தமும் பள்ளிக்கு வருபவரையும் Bank ஊழியர்-அங்கு வருவோர் , போவோர் அனைவருக்கும் நல்ல் கருத்தை கொடுக்கவில்லை என்பது ஆசிரியருக்கு புரியாமல் இல்லை Prevention is the best Medicine உரிய நேரத்தில் வகுப்பில் இருந்துவிட்டால் பல பிரச்சனைகள் குறையும் மாணவரை மையப்படுத்தினால் எல்லாஅம் தானாக இயங்கும்.
இதர நாட்களில் :
அரசாணையின் படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும், தங்கள் வகுப்பு மாணவரை குழுவாகப் பிரித்து சுழற்சி முயற்சி முறையில் வகுப்பு வழிபாட்டைக் கண்டிப்பாக நடத்திட வேண்டும்.
வகுப்பில் நிகழ்வன:
- தமிழ்த்தாய் வாழ்த்து (ஒரு மாணவர் தனியாகப்பாடுதல்)
- உறுதிமொழி
- அனைத்துச்சமய வழிபாடு
- திருக்குறள் மற்றும் விளக்கம்
- செய்திவாசித்தல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
- இன்றைய சிந்தனை / பொது அறிவு /பழமொழி
- பிறந்தநாள் வாழ்த்து
- ஆசிரியர் உரை
- எளிய யோகா பயிற்சி
கடந்த வாரத்தில் ஒரு வகுப்பில் இந்த நிகழ்வு நடைபெறவே இல்லை. மாணவர் ஈடுபாடு எப்படி வரும் … இந்நிகழ்வை நட்த்தாத எந்த வகுப்பாசிரியரும் துறை ரிதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.
வகுப்புகளில் உரிய நேரத்தில் செல்வது, தயார்செய்த பாடங்களை நின்று நட்த்துவது மிக முக்கியம். முதல் பிரிவேளையில் நாற்காலியில் உட்கார்ந்து காலின் மேல் கால் போட்டு பாட்த்தை எப்படி நட்த்த முடியும்? கணித ஆசிரியர் கையில் Chalk-Piece இல்லாமல் எப்படி நட்த்த முடியும்? முன்னாளில் மரியாதையின் நிமித்தமாவது Chair-ஐ விட்டு எழுவது போல் இருந்தது. இன்று தளாளர் தந்தை, மற்றும் தலைமையாசிரியர் தந்தையர்கள் அடிக்கடி வருவதினால் என்னவோ Chair-ஐ விட்டுக்கூட எழாமல் உட்கார்ந்திருப்பதும், வருந்துவதற்குரிய செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்! தரப்படும் தவறாக உரிமையைத்ப் ஒருபோதும் வேண்டாம்.
வகுப்பறை அமைதி
மாணவர்களை அமைதிப்படுத்த முயற்சிகள்-முதலில்1 நிமிடம் Yoga பிறகு பாட்த்தை அறிமுகப்படுத்துதல்-தொடர் பாடம் எடுத்தல்.
ஒரு பிரிவேளை முடிந்த அடுத்த பிரிவேளை வரும்போது-பாட ஆசிரியர் மானவர் என்ன செய்ய வேண்டும் என்பது விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். 1.Yoga-அல்லது 1 மதிப்பெண், அல்லது வாய்ப்பாடு அல்லது Reading அல்லது ஒவ்வோர் ஆசிரியரும் தனது வகுப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுப்படுத்தியிருத்தல் அவசியம். ஒரு சில பாட ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் வகுப்பறையில் இல்லாவிட்டாலும் வகுப்பறை மிக அமைதியாக இருக்கும்.
ஒரு பிரிவேளைக்கும் அடுத்த பிரிவேளைக்கும் இடையில் ஆசிரியர் வகுப்பிற்குச் செல்ல வேண்டிய நேரம் மிக க்குறைவாகவே இருக்க வேண்டும். Take only 2 to 4 minutes. ஆனால் ஒரு பிரிவேளை Rest Period-அடுத்த பிரிவேளை வகுப்பிற்குச் செல்ல வேண்டும். இதற்கு எத்தனை நிமிடம் வேண்டும்? All depends on your goodwell 2011.
Man-hour : ஒரு நிமிடம் Waste செய்கிறோம் என்றால் ஒரு வகுப்பில்
50 பேர் இருந்தால், 50x1=50 நிமிடம் நாம் வீணடிக்கிறோம் என்று பொருள்.
Man days : 1 நிமிடம் கூடுதலாக பணி செய்தோம் என்றால் 50