சாதித்தது : பாராட்டுக்குரியது:
-
1989ஆம் ஆண்டிலிருந்து அலுவலக கோப்புகளிலிருந்து பெற்றதகவலின்படி இந்த ஆண்டு முதன் முதலாக 96 % 12ம் வகுப்பில் பெற்றுள்ளது. 100 அண்மையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி நம்பிக்கையைத்தருகிறது அல்லவா? 12ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு தாளாளர் மற்றும் அனைவர் சார்பிலும் பாராட்டுகள். 100ஐத்தொட நான்கு எண்கள் தான் இடைவெளி திட்டமிட்டு செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே என்னும் நம்பிக்கையைப் பெறுவோம். ஒவ்வொரு ஆசிரியரின் சாதனைப்பட்டியலை இதோ இணைப்பு ஒன்றிலே உள்ளது.
-
10ம் வகுப்பில் சாதனை 90% விழுக்காடு என்றாலும் ‘மென்மேலும் உயர (Excelsior) நமது பள்ளியின் விருது வாக்கை-மெய்யாக்க 10அடி எடுத்து வைக்க வேண்டியுள்ளது. ஓடிவிட்ட மாணவரைப் பிடித்து வந்து தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைத்தது பெரிய சாதனையாகக் கருதுகிறேன். பிற்காலத்தில் அவர்கள் ஆசிரியரை மறக்க மாட்டார்கள். 10-ஆம் வகுப்பு பாட ஆசிரியர் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களின் சாதனைப்பட்டியல் இதோ……… இணைப்பு II
-
நமது பள்ளியின் அளவிலான ஆசிரியரின் சாதனை எப்படி உள்ளது ஆண்டுத் தேர்வில் அரசின் ஆணைப்படி அத்தனை பேரும் அடுத்த வகுப்பிற்கு அனுப்ப பட்டாலும், எத்தனை மதிப்பெண்களுடன் நம் பள்ளியில் அடுத்த வகுப்பு சென்றுள்ளான் என்பது இணைப்பு III-இல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவரின் சராசரி அடைவு ஆசிரியரின் செயல்திறனை அளக்கும் அளவுகோல், எனவே தான். ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் தம் பாட சராசரி நிலை கவனிக்க வேண்டும்.
பள்ளி அளவில் சிறப்பாகச் செயல்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நமது பாராட்டுக்கள். ஒர் ஆசிரியருக்கும் மற்றுமோர் ஆசிரியருக்கும் ஒரு மதிப்பெண் சராசரியின் வித்தியாசம் என்றால் அதுவே பெரிய இடைவெளியாகும். நான் St.Antony’s Teacher என்பது பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்க நாம் பெறும் சராசரி மதிப்பெண்ணை உயர்த்துவோம். There must be Healthy Competition among the Teachers. மாணவரை தயாரித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற வைக்கும் ஆசிரியர்கள் அத்தனை பேரும் மிகச் சிறப்பாக மதிப்புச்செய்யப்படுவர் என்ற தாளாளரின் உறுதியையும் உங்களுக்கு தருகிறேன்.
கல்விச் செயல்பாடுகள்:-
தமிழ், ஆங்கில: அடிப்படைச் செயல்பாடுகள்:-
LSRW - Listening, Speaking, Reading, Writing, இது முறையே நடைபெற பாட ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். கவனிக்கவும், பேசவும், வாசிக்கவும் தெரியாதவன் எப்படி எழுத முடியும்? வாசிக்கத் தெரியாதவன் எப்படி தேர்வு எழுத முடியும்? முதலில் நம் பள்ளியில் நான் பாடம் எடுக்கும் வகுப்பில் வாசிக்கத் தெரியாதவன் யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் முழு முயற்சி எடுப்பது அவசியம்.
மாணவர்களை SSA முறையில் குழுக்களாகப் பிரித்து - அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதைக் கவனித்து - ஒரு நிலையில் இருந்து மறு நிலைக்கு முன்னேற வைப்பது நம்பணி. 1. மாணவரைக் கண்டறிதல், 2.குழுக்களாகப் பிரித்தல், 3.திட்டமிட்ட பயிற்சி, 4. Learning outcome.
6 முதல் 8 வரை உள்ள வகுப்புகள் – ஒவ்வொரு நாளும் மாலையில் 5.30 மணி வரை கூடுதல் நேர வாசிப்புப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி அளிக்க ஆசிரியர் முன்வருதல் வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இத்திட்டம் அறிக்கையில் மட்டும் வந்த்து. சரியாக செயல்படுத்தாமல் விட்டுவிட்டோம்.
இந்த ஆண்டும் செயல்படுத்த சிக்கல் ஏதும் இருந்தால் தாளாளர் முன்னிலையில் கூறவும்.
9ஆம் வகுப்பில் எழுதப்படிக்கத் தெரியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கும் இதே பயிற்சி அளித்தல்.
11ஆம் வகுப்பில் ஆங்கில வாசிப்புப் பயிற்சி, மற்றும் தமிழ் வாசிப்புப் பயிற்சி இல்லாத மாணவருக்கு இவ்வாண்டு இப்பயிற்சிக்கு வழிவகுத்தல் அவசியம். திருC.அந்தோணிசாமி, ஆசிரியர் மற்றும் J.பிரிட்டோ, ஆசிரியர் இச்செயலைச் செயலபடுத்துவார்கள். வரும் ஜுலை 3ஆம் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் மாலையில் இச்செயல்பாடு நடைபெற வேண்டும். செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு தொடங்கும் வரையிலும் நடைபெறும்.
பொதுவான தவறுகள்:
கையெழுத்து ஏடுகள் சரி பார்த்தல் Dictation (சொல்வதைக் கேட்டு எழுதுதல்)- Dictation-வாரத்தில் ஒரு நாளாவது கொடுக்க வேண்டும். ஒரு பத்தி (Para) ஒரு தலைப்பு) எப்படி திருத்துவது? முடியுமா? வகுப்பை குழுக்களாகப் பிரியுங்கள். குழுதலைவர்களைப் போடுங்கள். குழுத்தலைவன் நல்லவனாகவும், நன்கு படிப்பவனாகவும் இருக்கட்டும், அவனது ஏட்டை நீங்கள் திருத்துங்கள். மற்றவர்கள் ஏட்டை குழுத்தலைவர்கள் திருத்துவார்கள். ஏடுகள் திருத்துவது எளிதாகிவிடும் ஏடுகள் திருத்துவதும் எளிதாகிவிடும்.
இலக்கணப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுங்க்ள். Basic Concepts மீண்டும் மீண்டும் வாய்ப்பாட்டைப் போலச் சொல்ல வைத்தல் அவசியம்.
கணிதம்:
நமது பள்ளி இத்தனை கணித ஆசிரியர்களை பெற கொடுத்து வைத்த்தே. இத்தனை கணித Giants-யை வைத்துக் கொண்டு பாட சராசரியைப் பார்க்கும் போது சற்று சிந்திக்கவே வைக்கிறது. One Talented Man Should Make Others Talente. Pass Mark எடுக்க வைத்தால் போதும் கணித மேதை இராமனுஜத்தின் வாரிசுகள் நீங்கள். அவர் தஞ்சாவூர் மாவட்ட்த்தில் தான் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயரால் நீங்கள் வீறுகொண்டு எழுந்து கணித்த்தின் அடிப்படிகளை நன்கு சொல்லிக்கொடுங்கள்.
‘What I gave , I have
What I spent, I had
What I kept, I lost”
இது கணித ஆசிரியர்களுக்கு முற்றிலும் பொருந்தும். முழுப் பொருளும் புரிந்தால்-நாம் Great ஆக முடியும்.
- வாய்ப்பாடுகள்-படிக்க வைத்தல்
- அடிப்படைச் செயல்கள்-கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
- முழு எண்கள் பதின்ம எண்கள், பின்னங்கள்.
- வடிவங்கள்-மாதிரிக்க்கணக்குகளை மட்டும் நட்த்தி விட்டு மற்றவற்றை மாணவர் கணக்காகவும், வீட்டுக்கணக்காகவும், விட்டுச்செல்கின்ற ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. அனைத்து கணித ஏடுகளும் திருத்தப்படுதல் அவசியம்.
அறிவியல்:
- ஆய்வகம் பயன்படுத்தாத அறிவியல் பாடம், அறிவியல் ஆகாது
- நமது பள்ளியில் ஒருசில அறிவியல் ஆசிரியர்கள் நன்றாக ஆய்வகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
- Suggestion Box, மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் செய்முறைப் பயிற்சிகள் நடத்தப்படுதல் இல்லை என்ற குற்றசாட்டும் மாணவர்கள் எழுதியுள்ளனர்.
- அறிவியல் பாட த்தில் இந்த ஆண்டு இன்னும் மேல்நிலையில் Lab-பயன்படுத்தியதை நான் பார்க்கவில்லை. பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.
- கல்வித் துறையின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யுங்கள். என்ன Practical செய்துள்ளீர்கள் என்று கேட்டால் பதில் வருவது இல்லை. பல பள்ளிகளில் Practical செய்துள்ளீர்கள் என்று கேட்டால் பதில் வருவது இல்லை. பல பள்ளிகளில் practical செய்யப்படவில்லை என்பதற்காக நமது பள்ளியும் இருக்கக் கூடாதல்லவா!.
ஒவ்வொரு மாதமும் Completion Record அறிவியில ஆசிரியர்கள் தர வேண்டும். அதில் இந்த மாதம் சொன்ன Practicals என்ன என்பதும் தெளிவுபடுத்துதல் அவசியம். இன்று மாணவனைச் சரியாக க் கொண்டு செல்ல அறிவியல் ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
எ.கா:- Plastic பயன்படுத்துதல் -நன்மை, தீமைகள் மாற்றுவழி என்ன-என்பதை உணர்வுப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும்,க் விளக்க முடியும். Health Tips, Nail Cutting, Hair Cut, Tight Dressing.
- மற்ற பள்ளிகளில் Damage Record என்று இருக்கும். யார் செய்தது? எதனால்? அதன் தொகை என்ன? Special fees A/C சேர்க்கப்படும் . நமது பள்ளியில் அப்படி நடைபெறுவதாக தெரியவில்லை.
- எல்லாம் கவனமாக பாதுகாப்பாகச் செய்ய்யப்படுகிறது என்று பொருள்.
- எதுவுவே செய்ய முடியவில்லை என்று பொருள்.
- இதுவரை இது போன்ற Record பயன்படுத்தவில்லை-இனி பயன்படுத்துகிறோம் என்று பொருள்.
சமூக அறிவியல்:
Map இல்லாமல் சமூக அறிவியல், வரலாற்று ஆசிரியர் பாடம் எடுப்பது தவிர்க்க வேண்டும். Map இல்லாமல் பாடம் எடுக்கும் சமூக அறிவியல் ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்படும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட Atlas-ஐப் பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிவுறுத்த வேண்டும்.
Map தொடர்பாக சில வழிமுறைகள்:
சில Concepts மாணவர்களுக்கு புரியும் என நினைத்துக் கொண்டு- விளக்குவதை விட்டுவிடக்கூடாது. Ex-ஜாமீதாரி முறை, குடியரசு, கொடுங்கோலட்சி, உரிமை, மொகஞ்சதாரோ, ஹரப்பா-(TV Channel)