RSP / SCOUT
பள்ளியின் இணைச்செயல்பாடுகள் - இயக்கங்கள் பொறுப்பாசிரியகள்
- சாரணர் இயக்கம் - திரு.I.குழந்தைசாமி, திரு.S.ஜோசப், திரு.E.இருதயம், திரு.G.பன்னீர் செல்வம்.
- தேசிய மாணவர்படை - திரு.X.பிரபு அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.
- NSS - திரு.J.பிரிட்டோ முதுகலை ஆங்கில ஆசிரியர்.
- NGC - திரு.M.உபகாரதாஸ் தமிழ் பட்டதாரி ஆசிரியர்.
- JRS - திரு.S.கிரிஸ்டோபர் ஓவிய ஆசிரியர்.
- RSP - திரு.S.அருள்தாஸ் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.
- RRC - திரு.A.ரெக்ஸ் ஆல்பர்ட் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்.
நூற்று முப்பது ஆண்டுகளாக கடந்த எமப்பள்ளி சாரணர் இயக்கம் நூற்றாண்டு கடந்தும் போற்றுதலுக்குரிய வகையில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் பலரையும் ஆசிரியர்களாக்கொண்ட எம் சாரணர் படையின் வளர்ச்சிக்கு பெரிதும் தொண்டாற்றிய திரு.டேவிட் பொன்னுதுரை போன்ற சிறப்பு மிக்கவர்களால் வழிநட்த்தப்பட்டு வந்த்து என்பது குறிப்பிட்தகுந்த்து.
இடையில் சற்று தொய்வுற்று இருந்தாலும் 2001ல் அருள் திரு அ.மரிய சூசை அடிகளரால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு அருள்திரு A.ஜான் இருதயராஜ் அவர்கல் காலத்தில் சிகரம் தொடும் அளவிற்கு உயர்ந்த்து. 2001ல் திரு I.குழந்தைசாமி அவர்களை பொறுப்பாசியராக கொண்டு ஒரு படையுடன் புத்துணர்வு ஊட்டப்பட்ட சாரணர் படை ஐந்து சாரணர் படை ஒரு திரிசாரணர்படை என்ற அளவிற்கு ஆலமரமாய் வளர்ந்த்து. திரு. Y.வின்செண்ட், திரு.S.ஜோசப், திருE.இருதயம், திரு.G.பான்னீர் செல்வம் என ஐந்து பயிற்சி பெற்ற சாரண ஆசிரியர்களைக் கொண்டு மாவட்ட அளவில் அதிக சாரணர்படை பதிவு செய்த பள்ளி என்ற பெருமையைப் பெற்று அதை இந்நாள்வரை தக்கவைத்துள்ளது. 2005ல் ஹரித்துவாரில் நடைபெற்ற 15வது உலக ஜாம்போரியில் 10 சாரணர்கள் திரு I.குழந்தைசாமி அவர்கள் தலைமையில் கலந்துகொண்டு அந்நாளைய குடியரசுத்தலைவர் மாமேதை ஏ.பி.கே அப்துல்கலாம் மற்றும் அந்நாலைய பாரதப்பிரதமர் திரு.மன்மோகன்சிங் ஆகியோரிடம் தேசிய ஒருமைப்பாட்டு விருது வாங்கி உலக சாதனை புரிந்த்து. ஒரு பள்ளியில் இருந்து ஜாம்போரில் அதிக எண்ணிக்கையான 10 பேர் கலந்துகொண்ட்து இதுவரை சாதனையாக உள்ளது.
மேலும் ஆண்டுதோறும் குறைந்த்து 30 அதிகபட்சமாக 49 என்ற அளவில் மாநில ஆளுநர் விருதுகளை சாரணர்பெற பயிற்சியளித்து வருகிறது. மாவட்ட அளவில் சாரணர் அலுவலம் சாரணர்திடல் சாரணர் கூடாரம் என அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியில் மாவட்ட அளவில் முதன்மைப் பள்ளியாக நிலைநிறுத்த பள்ளியின் இந்நாளைய தலையாசிரியர் அருள்திரு.J.அந்தோணிசாமி அடிகளாரும் தாளாளர் அருள்திரு.S.மரியலூயிஸ் அடிகளாரும் பெரிதும் துணைபுரிந்து வருகிறார்கள். இமயமலை பயிற்சி முடித்த ஒரு ஒரு சாரண ஆசிரியரும் முன்னோடி பயிற்சி முடித்த மூவரும் இருப்பதால் அனைத்து பயிற்சிகளும் முறையாகவும் சிறப்பாகவும் நட்த்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆண்டு நிறைவு முகாமை வெளிமாவட்ட பயிற்சியாளர்களைக்கொண்டு முறையாகவும் நிறைவாகவும் அளித்துவருகிறது.