NCC
நாட்டுநலப்பணித்திட்டம்
தூய.அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் 2004ம் ஆண்டு தலைமையாசிரியர் அருட்திரு.A.ஜான் இருதயராஜ் அடிகளார் அவர்களால் துவக்கப்பட்டது. அப்பொழுது, அதன் பொருப்பாசிரியராக முதுகலை ஆசிரியர் திரு.P.எலியாஸ் அவர்கள் நன்முறையில் செயல்படுதினார். அவருடன் முதுகலை ஆசிரியர் திரு.S.சந்தனசாமி அவர்கள் உதவியாக இருந்தார். 2007ம் ஆண்டுமுதல் முதுகலை ஆசிரியர் திரு.ஞா.புகழேந்தி தாமஸ் அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தி வருகின்றார். இதில் 11ம் வகுப்பில் 25 மாணவர்களும் 12ம் வகுப்பில் 25 மாணவர்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு காலாண்டு விடுமுறையிலும் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த ஆண்டு மாதாக்கோட்டை கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்பணியில் மாணவர்கள் பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் விழிப்புணர்வு பேரணிகள், தூய்மை பணி, அரசு விழாக்கள் மற்றும் பள்ளியில் நடைபெறும் விழாக்களில் முழுமையாக பங்கேற்று செயல்பட்டுவிடுகின்றனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் ஒரு மாணவன் கலந்து கொண்டு ‘B’ சான்றிதலுக்கு தகுதியுடையவர் ஆவார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நம் பள்ளியில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கான சிறப்பு தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி கல்விதுறை இணை இயக்குநர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் நம் பள்ளியின் வளாகம் தூய்மையாக வைத்தல் சைக்கிள் நிறுத்தம் ஒழுங்கு படுத்துதல் போன்ற செயல்பாடுய்களில் N.S.S மாணவர்கள் சிறப்பாக பணி செய்து வருகின்றனர்.
N.C.C. – [MOTTO-UNITY & DISCIPLINE] தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி
நூற்று முப்பது ஆண்டுகளை கடந்த நம்பள்ளியில் கடந்த 23-ஆண்டுகளாக தேசிய மாணவர் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1992 முதல் ஜனவரி வரை (20 ஆண்டுகள்) தேசிய மாணவர்படையை மேஜர் S.சேவையர் பால்ராஜ் அவர்கள் சிறப்பாக வழிநட்த்தி வந்தார்கள். 2012 ஜனவரி முதல் அருட்திரு J.அந்தோணிசாமி அடிகளார் அவர்கள் திரு.X.பிரபு அவர்களை NCC பொருப்பாளராக நியமித்தார்கள். இவர் 2013 ஜுன் 10ம்தேதிமுதல் செப்டம்பர் 07,ம் தேதிவரை (மூன்று மாதங்கள்) மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் (Office Training Acadamy (OTA) பயிற்ச்சி பெற்று Third officer என்ற Rank-டன் NCC Officer-ராக பணிவுயர்வி பெற்று பணியாற்றி வருகிறார். செயல்பாடுகள்: ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு (First Year -50 , Second Year-50) பயிற்சி கொடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகள்: Drill, Map Readiry , Firing Theory பயிற்சிகள் ராணுவத்தின் முக்கியத்துவத்தையும் அதில் சேர்வதற்க்கான வாய்ப்புக்களையும் நாட்டின் பாதுகாப்பையும் தெளிவாக கற்ப்பிக்கப்படுகிறது. முகாம்கள்: ஆண்டுத்தோறும் முகாம்கள் நட்த்தப்பட்டு அதில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 1. நம்பள்ளிகள் மாணவர் D.தினேஷ் 2013ம் ஆண்டு November மாதம் டெல்லியில் முப்படை அணிவகுப்பு மைதானத்தில் 15 நாட்கள் துப்பாக்கி சுடும் சிற்ப்பு பயிற்ச்சி பெற்று வந்துள்ளான். 2. 2014-மே மாடம் A.அபினாஷ், கெளதம் என்ற இரண்டு மாணவர்கள் மத்திய பிரதேசம் சென்று 10 நாட்கள் மலையேறும் பயிற்சி பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆண்டுதோறும் Social Service செயல்பாடுகள்: 1. Rain water harvesting rally 2. Cancer awernes program 3. Antitobaco rally 4. Aids விழிப்புணர்வு போன்ற செயல்பாடுகளை எம் தேசியபடையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அன்போடு தெரிவிக்கின்றோம்.
நன்றி,
அன்புள்ள,