Events & Activities
தர்மபுரியில் நடந்த ஹாக்கி போட்டியில் எம் பள்ளி வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமாக மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. உடற்கல்வி ஆசிரியர் திரு ஜோன்ஸ் அவர்களையும் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம்.
தஞ்சாவூர், தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05-01-2023) 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.. மேலும் மாணவர்களுக்கு போதை ஒழிப்பின் அவசியம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
பள்ளியின் பெயரைப் பாருக்குச் சொல்லிடும் பயணம். இராஜஸ்தான் நோக்கி. 35000 பேர் 3500 கூடாரங்கள் பள்ளியின் பெயரில் அமைந்த ஒரே கூடாரம் St. Antonys tent. கைத்தட்டவும் ஆளில்லை கரம் கொடுக்கவும் யாருமில்லை ஆனாலும் சாதித்து பள்ளியின் பெயரை ராஜஸ்தான் மண்ணில் நிலைநாட்டித் திரும்புகிறோம். மூன்று மாதத்திற்குள் Regional, National, International என மூன்றிலும் பங்கேற்ற ஒரே பள்ளி என்ற எவரும் முறியடிக்க முடியாத சாதனை. மூனு டிகிரி வெப்பநிலையிலும் முழுமையான ஈடுபாட்டோடு இருக்கும் நம் பள்ளி சாரணர்கள்.